புதுப்பானையில் பொங்கல் வைத்து தமிழகத்தில் கொண்டாட்டம்- வீடியோ

Oneindia Tamil 2018-01-11

Views 216

உயிர்கள் வாழவும், பயிர்கள் செழிக்கவும் உதவவும் சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தங்களின் விளைவிட்ட பொருட்களைக் கொண்டு இறைவனுக்குப் படைத்து அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

தை முதல் நாளன்று பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் பாரம்பரிய முறைப்படி இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் பொதுமக்கள் பலரும் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புது மண்பானையில் புத்தரிசியிட்டு வெல்லம், முந்திரி, திராட்சை, நெய் ஊற்றி பொங்கலிட்டனர். நகரமாக இருந்தாலும் வீட்டு வாசலில் பலரும் சூரியனுக்கு படைத்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பியதோடு இறைவனை வழிபட்டு பொங்கலை உண்டனர். வீடுகளில் பொங்கல் வைத்து வழிபட்டவர்கள் கோவில்களுக்கும் சென்று வழிபட்டனர். கிராமங்களில் பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வீட்டிற்கு வெளியே அழகாய் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைத்து படைத்து கரும்பு, காய்கறிகள் பழங்களை வாழை இலையில் வைத்து படைத்தனர். தமிழகம் மட்டுமன்றி, உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் பொங்கல் திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

The Pongal festival is celebrated to thank the sun, rain and farm animals.The harvest festival of Pongal was celebrated by people of Tamil Nadu on saturday in the traditional manner.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS