பள்ளி பேருந்து ஓட்டுனர்களை வைத்து சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டம் ?- வீடியோ

Oneindia Tamil 2018-01-11

Views 2.3K

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை சமாளிக்க முடியாமல் பள்ளி, கல்லூரி பேருந்து ஓட்டுநர்களை வைத்து சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாலேயே நாளை முதலே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் பள்ளி ஓட்டுனர்கள் கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கியுள்ள அரசு, கல்வி நிறுவனங்களின் பேருந்துகளையே சிறப்பு பேருந்துகளாக இயக்க பள்ளி, கல்லூரிகளை நிர்பந்திப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 காரணி ஊதிய உயர்வு, ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன போக்குவரத்து தொழிற்சங்கங்கள். 2.44 காரணிக்கு மேல் தர முடியாது, 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்யப்படும் என்று அரசும் தனது முடிவை தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் இரண்டு தரப்பின் சண்டையால் மக்கள் 8 நாட்களாக போக்குவரத்துக்கு அல்லாடி வருகின்றனர். இதில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அரசின் மீது ஏற்கனவே கொந்தளிப்பில் இருக்கும் மக்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாவிட்டால் மேலும் கோபம் அடைந்துவிடுவார்கள் என்பது அரசுக்கு தெரிந்திருக்கிறது.

Government announced leave to schools not to celebrate the Tamil cultural festival Pongal rather the reason is to use private educational institutions drivers as special bus drivers.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS