அனைத்தையும் ஆதார் அட்டையுடன் இணையுங்கள் என்ற காலம் போய் தற்போது ஆதார் அட்டைக்கு தற்காலிக எண் வாங்குங்கள் என்று ஆதார் அமைப்பு சொல்ல தொடங்கி இருக்கிறது. இது ஆதார் அமைப்பு மீது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த எண்ணை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று ஆதார் அமைப்பு ஒரு விளக்கம் கொடுத்துள்ளது. அதுதான் தற்போது ஆதார் அமைப்பு மீது சந்தேகத்தையே உருவாக்கி இருக்கிறது. உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை ஏன் இப்போது இப்படி ஆகி இருக்கிறது என்று கேள்விகள் எழும்பி இருக்கிறது. முக்கியமாக மக்களுக்காக ஆதாரா? ஆதாருக்காக மக்களா? என்ற கேள்வியும் துரத்திக் கொண்டு இருக்கிறது.
ஆதார் அறிமுகப்படுத்தி இருக்கும் தற்காலிக எண் என்பது 16 இலக்கம் கொண்டது. இனி அனைத்து இடங்களிலும் ஆதார் எண்ணை காண்பிக்க தேவையில்லை, அதற்கு பதிலாக இந்த தற்காலிக எண்ணை பயன்படுத்தலாம். இது குறிப்பிட்ட காலத்திற்குள் காலாவதியாகிவிடும் என்பதால் பாதுகாப்பானது. இந்த எண்ணை ஆதார் மையம், இணையதளம், மொபைல் மூலம் பெறலாம்.
ஆதார் தகவல் திருட்டை தடுக்க இந்த புதிய முறை அறிமுகம் என்று ஆதார் அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஏனென்றால் தற்காலிக எண் மூலம் நம்முடைய ஆதார் எண் யாருக்கும் தெரியாது என்று கூறப்படுகிறது.
Aadhaar introduces Virtural ID for instant uses . This virtual id system raises many question in the safety of the Aadhaar card and People's identity