எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது பற்றி பழமொழி கூறி கிண்டலடித்தார் சுயேச்சை எம்எல்ஏ டிடிவி தினகரன் சட்டசபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்த தினகரன், எடப்பாடி பழனிச்சாமி அரசை கடுமையாக சாடி பேசினார்.
எம்எல்ஏக்களை தக்கவைக்க எடப்பாடி பழனிச்சாமி என்ன வேண்டுமானாலும் செய்வார். கடைத்தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல ஊதிய உயர்வை கொடுத்துள்ளார் என்றார்.
அவர் வீட்டு பணமா?யாருடைய பணமோதானே. 'ஊரான் வீட்டு நெய்யே... எங்க அண்ணன் பொண்டாட்டி கையேன்னு ஒரு பழமொழி இருக்கு... தஞ்சாவூர் மாவட்டத்தில அடிக்கடி சொல்வாங்க. தன் வீட்டு நெய்யை பத்திரமாக வச்சுக்கிட்டு அடுத்தவன் வீட்டு நெய்யை அள்ளி விடுவாங்க அந்த கதையா இருக்கு எடப்பாடி பழனிச்சாமி
கடைத்தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல மக்கள் பணத்தை அள்ளி விடுவதா? என்றும் கேட்டார் தினகரன். தினகரனின் சொலவடைகளைக் கேட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சிரித்தனர்.