News Wallet | போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்?- வீடியோ

Oneindia Tamil 2018-01-10

Views 22K

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.100 கோடி நஷ்டம்.. தற்காலிக ஓட்டுநர்களால் 5 பேர் சாவு!பஸ்கள் வேலை நிறுத்தம் தொடங்கிய பிறகு இதுவரை 5 பேர் தற்காலிக பஸ் டிரைவர்கள் ஓட்டிய வாகனத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். அரசுக்கு சுமார் ரூ.100 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடன், பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு முதலே தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீரென ஸ்டிரைக்கில் குதித்தனர்.

https://tamil.oneindia.com/news/tamilnadu/bus-strike-claim-5-deaths-tamilnadu-307997.html

காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் இன்னும் 4 வாரத்தில் தீர்ப்பு... உச்சநீதிமன்றம் அதிரடிகாவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் இன்னும் ஒரு மாதத்துக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007ல் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பபை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இவற்றின் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்றது.


https://tamil.oneindia.com/news/india/final-verdict-will-be-given-within-4-weeks-cauvery-water-dispute-307966.html


அறிவு பசிக்கு சரியான வேட்டை.. இன்று தொடங்குகிறது சென்னை புத்தகத் திருவிழா
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று தொடங்கும் புத்தகக் கண்காட்சி வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது.

புத்தக விரும்பிகளின் திருவிழாவாக கருதப்படும் இந்த புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. அனைத்து தரப்பினரையும் புத்தகக் கண்காட்சிக்கு ஈர்க்கும் வகையில் இந்த முறை பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://tamil.oneindia.com/news/tamilnadu/41th-chennai-book-fair-opens-today-307996.html

சென்னை ஜோயாலுக்காஸ் நகைக்கடையில் திடீர் வருமான வரி சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கடைக்கு சொந்தமாக தமிழகம் மற்றும் கேரளாவில் இருக்கும் பத்து கிளைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் வீடுகளில் அடிக்கடி சோதனை செய்யப்பட்டது.

https://tamil.oneindia.com/news/tamilnadu/it-raid-chennai-joyalukkas-jewellery-307980.html

ஹெச்1-பி விசா வைத்துள்ளவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டம் எதுவும் அமெரிக்க அரசுக்கு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய தொழில்நுட்ப நிறுவன பணியாளர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் அரசின் கொள்ளை, அமெரிக்காவுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பது. இதன் ஒரு பகுதியாக, ஹெச்1-பி விசா விதிமுறைகளில் திருத்தம் செய்ய அமெரிக்க அரசு முயல்வதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நடவடிக்கையால், இந்தியாவை சேர்ந்த சுமார் 7,50,000 பேர், நாட்டை விட்டு வெளியேற்றப்படும் சூழல் உருவாகும் என கணிக்கப்பட்டது.

https://tamil.oneindia.com/news/international/breath-indian-techies-us-says-no-change-h-1b-extension-policy-307929.html

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS