போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து 6 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனே பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஊழியர்களை பணியமர்த்தப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளதுடன் இன்று தங்களின் குடும்பத்தினருடன் போரட்டம் நடத்தினர்.
ஊதிய உயர்வு, நிலுவை தொகைகளை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 6வது நாளாக தொடரும் இப்போராட்டத்தினால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்படுகிறது. பயிற்சி ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதால் பல இடங்களில் விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கள் பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் கூட்டத்தை சமாளிக்க சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் இல்லை என்றால் புதிதாக ஊழியர்கள் நியமணம் செய்யப்படுவார்கள் என்றும் போக்குவரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் தங்களின் கோரிக்கைகளை முற்றிலும் நிறைவேற்றும் வரை போரட்டம் தொடரும் என்று போக்குவரத்து தொழிலாளர்களும் தொழிற் சங்கத்தினரும் தெரிவித்துள்ளனர்.
பைட்
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தினால் தற்காலிக பணியாளர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதால் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளதா என்றும் பயிற்சி பெற்றுள்ளனரா என்று போக்குவரத்து பணிமனைகளில் அமைச்சர்களும் மாவட்ட ஆட்சியர்களும் ஆய்வு நடத்தினர்.
பைட்
அனுபவம் இல்லாத ஓட்டுனர்களை கொண்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்துகளில் பயணம் செய்ய பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் தற்காலிக பணியாளர்கள் பேருந்துகளை இயக்குவதற்கு அரசு பணியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் தமிழகத்தில் ஒருசில இடங்களில் பேருந்துகளை கல்வீசி தாக்கும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி பொதுமக்களின் சிரமத்தை போக்க
Des : Transport workers continue to strike for the 6th day. The new employees will be hired if the participants do not return to work immediately, Minister said. But the fighters have announced that they will continue their struggle until their demands are fulfilled and today they are fighting with their families.