15 வருடத்திற்கு முன்பே காப்பிரைட் வாங்கிய ரஜினி!!- வீடியோ

Filmibeat Tamil 2018-01-08

Views 3

அரசியல் பிரவேசம் செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது மன்றத்தின் லெட்டர் பேடில் பயன்படுத்தும் பாபா முத்திரைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே காப்பிரைட் வாங்கிய விவரம் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி அதிரடியாக தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையும் அதிர வைத்தார் ரஜினி. இவரது அரசியல் அறிவிப்பு இந்தியாவைத் தாண்டி, உலக நாடுகளிலும் எதிரொலித்தது.

தனது கட்சியின் கொடி, சின்னம் போன்றவற்றை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை ரஜினிகாந்த். ஆனால் பாபாஜியின் அபான முத்திரையை தனது மக்கள் மன்ற இணைய தளம், லெட்டர் பேட் மற்றும் அறிவிப்புகளில் பயன்படுத்தி வருகிறார். இதை வைத்து, இந்த முத்திரைதான் ரஜினியின் சின்னமாக இருக்கக் கூடும் என பல்வேறு தரப்பிலும் பேசி வந்தனர்.

இந்த நிலையில் பாபா முத்திரைக்கு உரிமை கோரி மும்பை நிறுவனம் ஒன்று ரஜினி மன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அபான முத்திரை என்பது சித்தர்கள் காலத்திலிருந்து இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. குறிப்பாக புத்தர் காலத்திலேயே இந்த முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்யம் தரும் முத்திரை இது என்பது சித்தர் வாக்கு. இதையே பாபாஜியும் தனது யோக முத்திரையாக சீடர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

பாபாஜி தொடர்பான அனைத்து குறிப்புகளிலும் இந்த அபான முத்திரைக்கு பிரதான இடம் உள்ளது. ரஜினிகாந்த் பாபா படம் தயாரித்து நடித்தபோது, இந்த பாபா முத்திரையை தனது பிரத்தியேக ஸ்டைலாகப் பயன்படுத்தினார். அப்போது பாபா படத்தில் இடம்பெற்ற பல்வேறு விஷயங்களுக்கு பாபா படக் குழு காப்பிரைட் பெற்றது. பாபா முத்திரை, பாபா தலைப்பு, அப்படத்தில் ரஜினி பயன்படுத்திய கத்தி டிசைன், தலைப்பாக்கட்டு போன்ற அனைத்துக்கும் காப்பிரைட் பெறப்பட்டது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து 2002லேயே சட்ட ரீதியாக அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது பாபா தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் குழு. 15 ஆண்டுகளுக்கு முன்பே அபான முத்திரைக்கு சட்டப்படி காப்புரிமையை ரஜினிகாந்த் பெற்றுவிட்டதால், தனியார் நிறுவனம் அனுப்பியுள்ள கடிதம் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்கிறது ரஜினி மக்கள் மன்றத் தரப்பு.


According to sources, Rajinikanth has got copyright for his controversial Abana Mudhra popularly known as Baba Mudhra.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS