ஜெயலலிதாவை அடித்தது சசிகலா குடும்பம் தான் - பொன்னையன் திடீர் தகவல்- வீடியோ

Oneindia Tamil 2018-01-08

Views 2

ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர் ஆணி கட்டையால் தாக்கியதால்தான் அவரது கன்னத்தில் மூன்று ஓட்டைகள் விழுந்துள்ளன என்று அதிமுகவின் முதன்மை செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார். ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 5-ஆம் தேதி அவர் உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக பல்வேறு தகவல்கள் எழுந்தன. இதையடுத்து அவரது மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சன் நியூஸ் தொலைகாட்சி நிறுவனத்தின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுகவின் முதன்மை செய்தித் தொடர்பாளர் பொன்னையன் கூறுகையில், தினகரனுக்கும், சசிகலா குடும்பத்தினருக்கும் சிக்கல்களை தர கூடியதுதான் ஆர்கே நகரில் அவர் பெற்றிருக்கும் இந்த வெற்றி. சூழ்ச்சி நிறைந்த வெற்றி. சட்டமன்ற இடைத்தேர்தலில் இப்படிப்பட்ட சூழ்ச்சிகளை செய்து வெற்றி பெற்று விடலாம் என்பதை தினகரன் இந்த உலகத்துக்கு நிரூபித்து விட்டார்

ADMK's Principal Spokesperson Ponnaiyan says that Jayalalitha was asked to sign in some paper by Sasikala and her family. When Jayalalitha refuses to do so, they attacked her using sharp weapon on her cheeks.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS