பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை போக்குவரத்து துறை அமைச்சர் எச்சரிக்கை - வீடியோ

Oneindia Tamil 2018-01-06

Views 277


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊதிய உயர்வு நிலுவை தொகைகளை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை உடனே வாபஸ் பெற வேண்டும் என்றும் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தற்காலிக பணியாளர்களை கொண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று கரூரில் போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பணிமணையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் நாளைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Des : The Transport Minister has warned that the action will be taken if the participants of the strike do not return to work tomorrow.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS