'தமிழ் சினிமா 2017' எனும் தலைப்பில் வெவ்வேறு பிரிவுகளில் நம் தளத்தில் வாசகர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் சிறந்த அறிமுக இயக்குநர் யார் எனும் கேள்விக்கு பலத்த போட்டி ஏற்பட்டது.
முடிவில், ரசிகர்களின் ஆதரவைப் பெற்று 'அருவி' திரைப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் 2017-ம் ஆண்டின் சிறந்த அறிமுக இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2017-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல புதிய, இளம் இயக்குநர்கள் களம் இறங்கினர். புதிய களம், புதிய பார்வை, புதிய முயற்சிகள் என ட்ரெண்ட் செட்டராக உருவாகின அவர்கள் இயக்கிய படங்கள். அறிமுக இயக்குநர்களின் படங்கள் பல திரைப் பிரபலங்களாலும், விமர்சகர்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டன.
கருத்துக்கணிப்பில் தேர்வு செய்யப்பட்ட ஆறு அறிமுக இயக்குநர்களில் 'அருவி' படத்தின் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் 36% வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்து மூன்று வருடங்கள் கடந்து, பல பிரச்னைகளுக்குப் பிறகு ரிலீஸான 'அருவி' படத்தை மக்கள் கொஞ்சினார்கள்; கொண்டாடினார்கள்.
In the opinion poll of our readers, there was a big competition for the question of who was the best debut director of the year 2017. Finally, Arun Prabhu Purushothaman, director of 'Aruvi', has been selected as the best debut director of the year 2017. 'Aramm' director Gopi Nainar got second place.