விபத்தில் சிக்கி உயிரிழந்த ரசிகரின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராக்கி சேகர் நடிகர் ராகவா லாரன்ஸ் ரசிகர் மன்றத்தில் மாவட்ட அமைப்பாளராக உள்ளார். இவர் புத்தாண்டு அன்று சென்னையில் லாரன்ஸ்சை தனது நண்பர்களுடன் சந்தித்தித்து வாழ்த்து கூறிவிட்டு பின்னர் கடலூருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது புதுவை அருகே அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த சேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து லாரன்ஸ்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட உடனே அவர் கடலூரில் நடைபெற்ற சேகரின் இறுதி சடங்கில் பங்கேற்றார். அப்போது தனது ரசிகரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.