ரஜினியைப் பற்றி சகாயம் என்ன சொல்கிறார் தெரியுமா?- வீடியோ

Oneindia Tamil 2018-01-04

Views 16.2K

தமிழ்ச்சமூகத்தை இனி எவராலும் ஏமாற்ற முடியாது, இளைஞர்கள் விழிப்பாக இருக்கிறார்கள் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ரஜினியின் அரசியல் வருகை குறித்து சகாயம் ஐஏஎஸ் இளைஞர்கள் மத்தியில் பேசிய பேச்சுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசியலுக்கு நடிகர்கள் வருவது குறித்து பலரும் விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாகவே இளைஞர்கள் மத்தியில் நிலவுகிறது. லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்று நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக இன்றைய இளைஞர்களின் முன் மாதிரியாக திகழ்கிறார் சகாயம்.
ஆனால் அவர் அரசியலுக்கு வராவிட்டாலும், இளைஞர்களை நல்வழியில் அழைத்து செல்லும் செயல்களை செய்து வருகிறார். இவரை ஊன்றுகோலாக வைத்து செயல்பட்டு வரும் மக்கள் பாதை என்ற அமைப்பு லஞ்சத்தை ஒழப்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்களை செய்து வருகின்றனர்.

இதே போன்று குறைந்த விலையில் மருந்து, நியாயமான அரசியல் பாதை என்று தனியானதொரு பாதையில் இளைஞர்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இயற்கை வேளாண்மை, கைத்தறி ஊக்குவிப்பு, கார்ப்பரேட்டுகளின் அட்டகாசங்களை வெளிச்சம் போட்டு காட்டுவது என்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் மக்கள் பாதை அமைப்பினர்.

Senior IAS officer Sahayam IAS speech about Rajini's Political entry 6 months before is going viral in social media now, in that speech Sahayam says no one will heat the Tamil people hereafter.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS