அமெரிக்க குளிர்பான நிறுவனத்தால் தான் ஜல்லிக்கட்டு மாடுகள் அழிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து குளிர்பானத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்பு அலையை குளிர்பானத்திலிருந்து வெளியாகும் நுரையே கரைத்து விட்டது. தமிழர்கள் யார், இளைஞர்களின் சக்தி என்ன என்று உலகையே திரும்பி பார்க்க வைத்த முக்கியமான நிகழ்வுகளில் பிரதானமானது ஜல்லிக்கட்டு போராட்டம். மத்திய, மாநில அரசுகளை மட்டுமின்றி உலக ஊடகங்களையும் திணறடித்த இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கிளை போராட்டமாக கருதப்படுவது வெளிநாட்டு குளிர்பானத்திற்கு எதிரான குரல். ஜெர்சி பாலை இந்தியாவில் அறிமுகம் செய்ய பிரபல அமெரிக்க குளிர்பான நிறுவனம் ஒன்று திட்டமிட்டு, பீட்டாவின் துணையுடன் நாட்டு மாடுகளை அழிக்க நினைத்த திட்டத்தின் விளைவு தான் ஜல்லிக்கட்டு போராட்டம். அதனால் அமெரிக்க குளிர்பான நிறுவனத்தின் குளிர்பானத்தை குடிக்க மாட்டோம் என ஏராளமான இளைஞர்களும், போராளிகளும் சத்தியம் செய்தனர்.
இவர்களின் சத்திய வீடியோக்களால் சமூகவலைதளங்களே திக்குமுக்காடி சோடா குடிக்கும் ரேஞ்சுக்கு திணறியது. ஜல்லிக்கட்டுக்காக களத்தில் நின்று போராடிய சகோதரர்களுக்காக அனைவரும் இந்த சத்தியபிரமாணத்தை இணையதளத்தை சாட்சியாக வைத்து ஏற்றுக்கொண்டனர். இளைஞர்களின் இந்த ஒற்றுமை அனைவரையும் திகைப்பூட்டியது. முக்கியமாக அரசையும், குளிர்பான நிறுவனங்களையும்...
Jallikattu protesters emphasis the American carbonated drinks ban but after a year its market is still in good position.