ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

Oneindia Tamil 2017-12-31

Views 384

நடிகர் ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்

கடந்த 5 நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து புகை படம் எடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்த் ஆறாவது நாளான இன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவித்தார் .தான் அரசியலுக்கு வருவது உறுதி வரும் சட்டமன்டற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தார் .இந்த அறிவிப்பை கேட்ட அவரது ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது . அவரது ரசிகர்கள் மண்டபத்தின் வெளியே பட்டாசு வெடித்து கொண்டாடினர்

இதேபோல் தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் இனிப்புகளை வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்

Des: After the announcement that actor Rajinikanth will contest 234 seats in the assembly election, his fans are happy to release sweets and crackers.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS