அனல் தெறித்த ரஜினியின் அரசியல் பஞ்ச்கள்!

Oneindia Tamil 2017-12-30

Views 40

நடிகர் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன? அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்பதற்கான அறிவிப்பை வெளியிடும் டெட்லைன் நாளை தான். 2017ம் ஆண்டு முடிவில் ரஜினி என்ன சொல்லப் போகிறார், பிறக்கப் போகும் 2018 ரஜினி ரசிகர்களுக்கு அது மகிழ்ச்சியான செய்தியாக இருக்குமா என்று காத்திருக்கின்றனர். "ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்" அருணாச்சலம் படத்தில் ரஜினி சொல்லும் இந்த வசனம் தான் ரஜினிகாந்த் நீண்டகாலமாக தனது அரசியல் வருகைக்கும் பதிலாக வைத்திருக்கிறார். நம் கையில் என்ன இருக்கிறது ஆண்டவன் என்ன சொல்கிறானோ அதை செய்வதே நம்முடைய வேலை, ஆண்டவன் என்னை நடிகனாக்கினார், அதன் பிறகு அவர் என்ன சொல்கிறாரோ அதைச் செய்வோம் என்று சொல்லி வருகிறார் ரஜினி.

முத்து படத்தில் ஒரு பாடலில் கட்சி தொடங்க வேண்டும் என்று வரும் வரிகளுக்கு ரஜினி நோ சொல்வது போல வரிகள் அமைக்கப்பட்டிருந்தன. கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு என்று ரஜினி பதில் சொல்வது போல அந்த பாடல். 1995ல் வெளிவந்த அந்த படத்திலேயே ரஜினி தன்னுடைய அரசியல் வருகை குறித்து வெளிப்படையாக சொன்ன வார்த்தைகளாக இது பார்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாட்ஷாவில் 'நான் ஒரு தடவை சொன்னா', எனக்கு இன்னொரு முகம் இருக்கு அதை பார்த்தா தாங்க மாட்ட என்று ரஜினியின் படங்களில் அவ்வபோது அரசியல் குறித்த பஞ்ச் டயலாக்குகள் இடம்பெற்றுக் கொண்டு தான் வந்திருக்கின்றன. பாபா படத்தில் கவுண்டமணி ரஜினியை அரசியலுக்கு இழுத்து வம்பு பேசும்படியாக ஒரு டயலாக் இருக்க அண்ணா நம்பள விட்ருங்க நமக்கு இதெல்லாம் வேண்டாம் என்று அப்போதும் எஸ்கேப் ஆனார்.

Actor Rajinikanth's famous punch dialogues and lyrics in his films regarding Politics and his speech among fans also grab attention. Here is some of his political based punch dialogue collections.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS