காஞ்சிபுரம் கடற்கரையில் பிணமாக கிடந்த இளம் பெண்

Oneindia Tamil 2017-12-30

Views 3

சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கடற்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ளது ஆலமரக்கோட்டை கிராமம். இது மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இந்தப் பகுதியின் கடற்கரையில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்ததை நேற்று அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஊர் மக்கள் சூணாம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் பரிசீலனை நடத்தினர். அந்த பெண்ணின் சடலத்திற்கு சற்று தொலைவில், ஒரு கைபை கிடந்தது. அதில் அடையாள அட்டையொன்று இருந்ததை போலீசார் கண்டெடுத்தனர்.

அடையாள அட்டையில், ஜாகிரா என்று பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. ஊர்பெயரில் சென்னை என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பெண் ஏன் இங்கு வந்தார், எப்படி உயிரை விட்டார் என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை.

ஆனால் கடற்கரை மணல் சிதறி கிடப்பதை வைத்து பார்த்தபோது, அவர் தனது உயிரை காப்பாற்ற போராடியது தெரியவந்துள்ளது. மேலும், ஆண்கள் அணியும் செருப்பு தடம் அந்த பக்கம் இருந்துள்ளது. எனவே இவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேநேரம், அந்த பெண் சுடிதார் அணிந்த நிலையில்தான் சடலமாக கிடந்தார். பலாத்காரம் செய்திருந்தால், குற்றவாளிகள் ஆடையை அணிவித்துவிட்டிருக்க வாய்ப்பில்லையே என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

A young woman from Chennai has been found dead in the beach in Kancheepuram district. On the identity card, the name of the girl was mentioned as Zagira. In the place, it was mentioned as Chennai. Police does not know why she came here and how she died.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS