11 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஆசை- பிரியங்கா சோப்ரா- வீடியோ

Filmibeat Tamil 2017-12-29

Views 870

திருமணம் செய்து 11 குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என்று நடிகை ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். பாலிவுட், ஹாலிவுட் என்று மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா. இது தவிர அவர் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அவர் எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். ப்ரியங்காவுக்கு 35 வயதாகிறது. அவர் தற்போது திருமணம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்.

இத்தனை நாட்கள் திருமணம் பற்றி கேட்டாலே நேரம் வரும்போது நடக்கும் என்பார் ப்ரியங்கா. இந்நிலையில் அவர் திருமணம் பற்றி தற்போது கூறியிருப்பதாவது, எனக்கு ஏற்ற மாப்பிள்ளையை நான் இன்னும் பார்க்கவில்லை என்கிறார்.
நான் கடினமாக உழைத்து இந்த அளவுக்கு முன்னேறியுள்ளேன். என் கடின உழைப்பை மதிக்கும் நபரையே திருமணம் செய்ய வேண்டும் என்று என் அம்மா சொல்லியுள்ளார் என ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.

நான் நிச்சயம் திருமணம் செய்ய விரும்புகிறேன். 11 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள ஆசை உள்ளது. ஆனால் சரியான மாப்பிள்ளை கிடைப்பது தான் கடினமாக உள்ளது என்று ப்ரியங்கா கூறியுள்ளார்.

முன்னதாக ப்ரியங்கா சோப்ராவுக்கும், ஷாருக்கானுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக பாலிவுட்டில் பேச்சாக கிடந்தது. அதன் பிறகு ப்ரியங்காவும், நடிகர் ஷாஹித் கபூரும் காதலித்து பிரிவதும், சேர்வதுமாக இருந்தனர். பின்னர் ஷாஹித் ப்ரியங்காவை பிரிந்து மீரா ராஜ்புட்டை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Bollywood actress Priyanka Chopra said that she definitely wants to marry and give birth to 11 kids. She added that it is difficult to find a suitable man for her.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS