'பேய் இருக்கா இல்லையா..?' -பாக்யராஜ்!- வீடியோ

Filmibeat Tamil 2017-12-29

Views 15

ஆறாம் திணை... இந்தத் தலைப்பில் ஒரு ஹாரர் படம் உருவாகி வருகிறது. ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அருண்.சி என்பவர் இயக்கிகிறார். இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். கதையின் நாயகனாக மொட்ட ராஜேந்திரன். முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். ராஜ் கே சோழன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இசையை வெளியிட்டுப் பேசிய இயக்குநர் கே பாக்யராஜ், "பேய் இருக்கா இல்லையான்னு இப்ப வரைக்கும் எல்லோரிடமும் ஒரு கேள்வி இருந்துட்டே இருக்கு. சின்ன வயசுல நான் கூட, இப்படி பேய் இருக்கும்னு நினைச்சு பயந்து பத்தடி தூரத்துல இருக்க என்னோட வீட்டுக்கு ஒரு பர்லாங் தூரம் சுத்திலாம் நடந்து வந்திருக்கேன். அப்புறம் போகப்போகத்தான் பேய் இல்லைன்னு எனக்கு தெளிவாச்சு.

ஒரு சிம்பிள் லாஜிக்.. இப்ப யாராலோ கொல்லப்பட்டு பேயா மாறுகிறவங்களுக்கு தங்களை கொன்னது யார்னு தெரியும். பேயா மாறிவந்ததும் அவங்களை கொன்னு பழி தீர்த்துட்டுப் போயிட்டா அப்புறம் காவல்துறை, நீதி மன்றம் இதுக்கெல்லாம் வேலையே இருக்காதே. அப்படி ஏன் கொல்றது இல்ல..?" என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, "பேய் உண்மையிலேயே இருக்கு.. பணப்பேய், பதவிப்பேய், காமப்பேய், மதப்பேய், ஜாதிப்பேய் என இப்படி பல பேய்கள் நமக்குள்ளேயே இருக்கு. இந்த சினிமாவையும் கடந்த ஐந்தாறு வருடங்களாக பேய் பிடித்திருக்கிறது. ஆனால் இது சினிமாவை வாழவைக்கும் நல்ல பேய். இந்தப்படத்தின் தயாரிப்பாளரையும் இந்த பேய் நிச்சயமாக காப்பாற்றும்," என்றார்.

Veteran film maker K Bagyaraj has released the audio of Aaram Thinai

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS