சோயப் அக்தரின் டிவிட் ஒன்றிற்கு யுவராஜ் சிங் மிகவும் காமெடியாக கமெண்ட் செய்து இருக்கிறார். அவர் போட்டு இருக்கும் கிரிக்கெட் விளம்பரம் ஒன்றிற்கான புகைப்படம் யுவராஜ் சிங்கின் டிவிட்டால் வைரல் ஆகி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் சோயப் அக்தர் வெல்டிங் செய்யும் நபரை போல தோற்றம் அளிக்கிறார். இதை யுவராஜ் சிங் கிண்டல் செய்து கமெண்ட் செய்துள்ளார். யுவராஜ் சிங்கின் கிண்டலை பார்த்துவிட்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலர் அக்தரை மேலும் கிண்டல் செய்து வருகின்றனர்.
அக்தர் தனது டிவிட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். ''லட்சியத்தோடு இருக்க பயப்படாதீர்கள். உங்கள் கடின உழைப்பு என்றும் வீண் போகாது. உங்களுடைய கனவுகள் என்றும் தோற்காது'' என்பது போல அந்த புகைப்படத்தில் எழுதி இருக்கிறது. அதில் அக்தர் கையில் பெரிய சிவப்பு நிற கிளவுஸ் ஒன்றும் ஹெல்மெட்டும் வைத்து இருக்கிறார்.
இந்த டிவிட்டிற்கு யுவராஜ் சிங் கிண்டலாக பதில் அளித்துள்ளார். அதில் ''கையில் வெல்டிங் செய்யும் கருவி எங்கே?'' என்பது போல கமெண்ட் செய்துள்ளார். அக்தர் பார்ப்பதற்கு வெல்டிங் செய்பவரை போலவே இருப்பதால் இப்படி கமெண்ட் செய்துள்ளார்.
Yuvraj Singh made fun of Shoaib Akhtar for his new tweet. He calls Shoaib Akhtar as welder from his new look in the poster.