டிடிவி தினகரன் விரைவில் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலக்கோட்டை எம்எல்ஏ அனுமன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
கடந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். நாளை அவர் சபாநாயகர் தனபாலை சந்தித்து எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொள்கிறார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவான தங்கதுரை தலைமையிலான தினகரன் அணியை சேர்ந்தவர்கள் அனுமன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். அப்போது எம்எல்ஏவாக பதவி ஏற்கும் தினகரன் விரைவில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்றும் அதற்கு அனுமன் தான் வழி செய்ய வேண்டும் என்றும் பிராத்தனை செய்துள்ளனர். சிறப்பு பூஜைகள் செய்து முடித்து விட்டு வெளியே வந்த தங்கதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டிடிவி தினகரன் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார்.
Des : Special Poojas held at MLA Hanuman temple in TTV Dinakaran, which was soon discharged to be the Chief Minister.