அதார் கார்டு இருந்தால் தான் பேஸ்புக் கணக்கா?- வீடியோ

Oneindia Tamil 2017-12-28

Views 5.3K

பேஸ்புக்கில் புதிய கணக்கு துவங்கும் சிலரிடம் ஆதார் விவரங்கள் கேட்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஆதார் விவரங்கள் இன்னும் சில நாளில் அனைவரிடமும் கேட்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. பேஸ்புக்கின் இந்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இன்னும் சிலர் இதனால் கோபமாக கருத்து தெரிவித்துள்ளனர். ஆதார் விவரங்கள் கேட்பது மட்டும் இல்லாமல் ஆதாரில் இருப்பது போல பெயர் வைக்க வேண்டும் என்றும் பேஸ்புக் கேட்டு இருக்கிறது.
பேஸ்புக்கில் மிகவும் அதிக அளவில் பொய்யான கணக்குகள் இருப்பதாக இரண்டு வருடத்திற்கு முன் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து பேஸ்புக் ஒரு அதிரடி முடிவு எடுத்தது. அதன்படி பேஸ்புக்கில் தமிழ் பெயர் வைத்து இருந்தவர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டது. மேலும் பலரிடம் பாஸ்போர்ட் விவரங்கள் கேட்டு உண்மையான ஐடியா என்று சோதித்தது.

தற்போது இந்தியாவில் இந்த சோதனையை புதிய முறையில் செய்ய இருக்கிறது பேஸ்புக். அதன்படி பலரிடம் ஆதார் விவரங்களை கேட்டு உள்ளது. இன்னும் சில நாளில் ஆதார் கார்டுடன் பேஸ்புக் கணக்கை இணைக்க வேண்டும் என்று கூற வாய்ப்பு இருக்கிறது. பொய்யான கணக்குகளை கண்டுபிடிக்க இப்படி செய்யப்பட உள்ளது.

தற்போது புதிய கணக்கு தொடங்கும் சிலரிடம் மட்டுமே இந்த நடைமுறை பின்பற்றபடுகிறது. அதுவும் கூட ''ஆதாரில் இருக்கும் படி உங்கள் பேஸ்புக் பெயர் இருந்தால், நண்பர்களால் எளிதாக உங்களை கண்டுபிடிக்க முடியும்'' என்று மிகவும் பணிவான கோரிக்கை மட்டுமே இப்போதைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கண்டிப்பாக இன்னும் சில நாளில் எல்லோரிடமும் இந்த விவரம் கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.





In a bid to check creation of fake accounts, Facebook is testing a new feature which encourages those opening new accounts to submit their names as in their Aadhaar cards. Facebook is currently testing this new feature on the limited number of users and not all users may be able to see this.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS