முதல் முறையாக சட்டசபைக்கு செல்லப்போகும் தினகரன்- வீடியோ

Oneindia Tamil 2017-12-28

Views 23.9K

வரும் 8 ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை பேரவைச் செயலளர் பூபதி வெளியிட்டுள்ளார். இந்த கூட்டத்தொடரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டிடிவி தினகரன் பங்கேற்கவுள்ளார். இந்த கூட்டத்தொடரில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெங்களுரூவில் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்றுவிட்டு இன்று இரவு சென்னை திரும்புகிறார் டிடிவி தினகரன். நாளை காலை சபாநாயகர் தனபால் முன்னிலையில் டிடிவி தினகரன் முறைப்படி பதவி ஏற்கவுள்ளார். இதனிடையே, பேரவை கூட்டத்தொடர் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

சட்டமன்றத்திற்குள் நான் சென்றால் யார் ஸ்லீப்பர் செல் என்பது தெரியவரும் என்று டிடிவி தினகரன் பேட்டியில் சொல்லியிருந்தார். சட்டமன்றத்திற்கு டிடிவி தினகரன் வந்தால் பூச்சி மாதிரி அவரை நசுக்கிவிடுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். சட்டமன்றத்திற்குள் நுழையும் முன்பே போட்டி ஆரம்பித்துவிட்டது.
யாருக்கும் அஞ்சாமல் சட்டமன்றத்திலும் டிடிவி தினகரன் தனித்து செயல்படுவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். சட்டமன்றத்தில் இனிமேல் வாய்க்கு வந்ததை முதலமைச்சர், துணை முதலமைச்சர் பேசமுடியாது, அவர்களுக்கு சரியான கவுன்டரை டிடிவி தருவார் என்கிறார்கள் ஆதரவாளர்கள்.

Immediately after TTV. Dinakaran's entry into assembly, 2018's first assembly session starting from January 8 raises more expectations

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS