நடிகை ஸ்ருதி ஹாஸன் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ருதி ஹாஸனின் கையில் சபாஷ் நாயுடுவை தவிர வேறு படம் இல்லை. ஆள் கொஞ்சம் வெயிட் போட்டதால் ஸ்லிம்மாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இதற்கிடையே காதலர் மைக்கேலுடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.
ஸ்ருதி ஹாஸன், குடும்பத்தார், நண்பர்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட்டில் காதலரை கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் நடந்த நடிகர் ஆதவ் கண்ணதாசனின் திருமண விழாவுக்கு ஸ்ருதி தனது காதலருடன் ஜோடியாக வந்தார். லண்டனை சேர்ந்த மைக்கேலுக்கு தமிழ் முறைப்படி வேஷ்டி சட்டை அணிய வைத்து அழைத்து வந்திருந்தார்.
ஸ்ருதியின் காதலுக்கு தந்தை கமல் ஹாஸன் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. ஆதவ் திருமணத்திற்கு கமல் ஹாஸனும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதி தனது காதலரை தாய் சரிகாவுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அடுத்த ஆண்டு ஸ்ருதி, மைக்கேல் திருமணம் நடைபெறக்கூடும் என்று கூறப்படுகிறது.
Actress Shruti Haasan has celebrated Christmas with family and friends. She has posted a picture of hers hugging her alleged boyfriend Michael Corsale. Buzz is that she will marry Michael next year.