ரஜினிக்கு மட்டும் நல்ல தலைவருக்கான அனைத்து தகுதிகளும் உண்டு என்றும் தமிழகத்துக்கு இன்று தலைமை யாரும் உள்ளார்களா என்று இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார். கடந்த மே மாதத்தில் ரஜினி ரசிகர்களை சந்தித்தபோது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும், போர் வரும்போது பார்த்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் அவரது அரசியல் பிரவேசம் உறுதியானது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கட்சிக் கொடி, பெயர் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ரஜினி செய்து வந்திருந்தார். இந்நிலையில் இன்று முதல் 6 நாள்களுக்கு ரசிகர்களை இரண்டாவது முறையாக சந்திக்கிறார். இன்று காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவள்ளூர், தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று முதல் 31-ஆம் தேதி வரை அவர் சந்திக்கிறார். தினமும் ஆயிரம் ரசிகர்கள் வீதம் சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சியை இயக்குநர் கலைஞானம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது ஓகி புயலால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கலைஞானத்தைத் தொடர்ந்து இயக்குநர் மகேந்திரன் பேசினார். அப்போது அவர் கூறுகையில் நல்ல தலைவனுக்குரிய அம்சங்கள் ரஜினியிடம் உண்டு. ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். தமிழகத்துக்கு இன்று தலைமை யாரும் உள்ளார்களா?. ரசிகர்கள் நிதானம் காக்க வேண்டும். 42 ஆண்டுகால பொறுமை ரஜினியை உயர்வான இடத்துக்கு எடுத்து செல்ல போகிறது. ஆளும், எதிர்க்கட்சியில் நல்ல தலைவர்கள் யாரும் உள்ளார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
Rajinikanth started his fans club meeting in his Ragavendra Thirumana mandapam. Director Mahediran asks that anyone is there in TN to lead?