கையில் பணம் இல்லாமல் உகாண்டாவில் மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்- வீடியோ

Oneindia Tamil 2017-12-22

Views 4.5K

உகாண்டாவிற்கு கிரிக்கெட் விளையாட சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பணப்பிரச்சனை காரணமாக அங்கு மாட்டிக் கொண்டு உள்ளனர். மேலும் அங்கு நடக்க இருந்த டி-20 கிரிக்கெட் தொடரும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

உகாண்டாவில் இருந்து திரும்பி வர அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பணம் கொடுக்கவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் புகார் அளித்து இருக்கின்றனர். மேலும் அங்கு தங்களது பணம் தான் அதிகம் செலவு ஆவதாக தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் தற்போது ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரண்டிற்கும் இடையில் பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. இன்னும் பாகிஸ்தான் வீரர்கள் அங்கு தான் சிக்கி தவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ்கிதானை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் சிலர் உகாண்டா நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட சென்றுள்ளனர். அங்கு நடக்கும் 'அஃப்ரோ டி-20 லீக்' போட்டியில் கலந்து கொள்வதற்காக இவர்கள் அங்கு சென்றனர். பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய வீரர்களான சயீத் அஜ்மல், யாசிர் ஹமித், இம்ரான் பர்ஹாத் ஆகியோரும் இந்த அணியில் இருந்தார்கள்.


Pakistan players struck in Uganda over payment dispute. They have gone there to play T-20 series, but the match has cancelled due to some reasons. Uganda cricket board refused to give the contract money to Pakistan players. So Pakistan player have struck in Uganda

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS