2017 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகை கலக்கிய முக்கிய நிகழ்வுகள்!- வீடியோ

Oneindia Tamil 2017-12-22

Views 1.6K

அரசியல் திருப்பம் தொடங்கி இயற்கை பேரிடர் வரை 2017ல் நிறைய சம்பவங்கள் நடந்து இருக்கிறது. அதற்கெல்லாம் எந்த விதத்திலும் குறைச்சல் இல்லாமல் கிரிக்கெட் உலகிலும் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது. கிரிக்கெட் உலகில் வளர்ந்து கொண்டு இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி தொடங்கி விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இந்திய அணி வரை அனைத்தும் இந்த தொகுப்பில் இருக்கிறது. ஒருநாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் மாறி மாறி நடந்த இந்த சம்பவங்கள் யாராலும் மறக்க முடியாதது. கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பான வருடமாகவே இருந்தது. பெரிய பெரிய தொடர்கள் 2018ல் காத்திருக்கும் வேளையில் 2017ல் என்ன நடந்தது என்று ஒரு சின்ன ரீ கேப்.

இந்திய அணியில் புதிய வைரலாக உருவாகி இருப்பவர் குல்தீப் யாதவ். ஒரேநாளில் இவர் ஸ்பின் உலகின் சூப்பர் ஸ்டார் ஆனதுதான் 2017ல் தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் இவர் ஹாட் டிரிக் விக்கெட் எடுத்தார். இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் ஹாட் டிரிக் எடுத்த மூன்றாவது பவுலர் இவர்தான். கபில் தேவ், சேட்டன் சர்மாவிற்கு அடுத்த இவர்தான் ஹாட் டிரிக் எடுத்துள்ளார். இவர் எடுத்த ஹாட் டிரிக்கை ஈடன் கார்டன் எத்தனை காலம் ஆனாலும் சொல்லும்.

2017 has lots best moments in cricket. Kohli knocked two double centuries, crossed 9000 runs, CSK back to IPL, Pakisthan started hosting ICC match again. In this 2017 Kuldeep took hatrick, Afkhanishtan' Rahseed Khan made into IPL and Bangladesh knock down Australia in Test

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS