ஜனவரி 14ம் தேதி வரை நடைபெற உள்ள பிரிமீயர் பேட்மின்டன் லீக்கில் பங்கேற்கும் சென்னை ஸ்மேஷர்ஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேட்மின்டன் வீராங்கணை பி.வி.சிந்து மற்றும் அணியின் உரிமையாளரும் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகர் ஆடிய லங்கி டான்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. கிரிக்கெட்டி விளையாட்டில் நடத்தப்படும் ஐபிஎஸ் போட்டிகளைப் போல பேட்மின்டனிலும் பிரிமீயர் பேட்மின்டன் லீக் நடத்தப்படுகிறது. இதன் 3வது தொடரானது டிசம்பர் 23ம் தேதி தொடங்கி ஜனவரி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பேட்மின்டன் பிரிமீயர் லீக்கி ஆண்டு தோறும் கேப்டன் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனின் சென்னை ஸ்மேஷர்ஸ் அணி பங்கேற்று வருகிறது.
இவரது அணியில் பி.வி. சிந்து, கிறிஸ் அட்ஹாக், கேபி அட்ஹாக் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பிரீமியர் பேட்மின்டன் லீக் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் சென்னை ஸ்மேஷர்ஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா சென்னை ஃபோரம் மாலில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பி.வி.சிந்து, கிறிஸ் அட்காக் உள்ளிட்டோர் மேடையில் இருக்கும் போது விஜயபிரபாகர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். அப்போது வீரர்களுடன் சேர்ந்து லுங்கி நடனம் ஆட நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்க, பி.வி.சிந்து விஜய பிரபாகரிடம் வேஷ்டியை கொடுத்து அதனை கட்டிக் கொண்டு ஆடுமாறு கோரிக்கை விடுக்கிறார்.
Chennai Smashers team Jersy introduction turns smart moment because of P.V.Sindhu and Vijayakanth's son vijaya Prabhakar Lungi dance