கிழக்கு திசையில் இருந்து காற்று கிளம்பவுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் 24ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். வடகிழக்குப் பருவமழை காலமான நவம்பரில் சென்னையில் மழை பெய்தது. டிசம்பரில் சரியான மழை பெய்யவில்லை. இந்த நிலையில் வெள்ளம் வரும் அளவுக்கு கனமழை பெய்யாது,மழையை அனுபவியுங்கள் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான். பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் அடுத்த 4 நாட்களுக்கு சென்னையில் இருப்பவர்கள் வெளியே செல்லும்போது, மறக்காமல் ரெயின் கோட், அல்லது குடையை உடன் எடுத்துச் செல்லவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக நமக்கு மழை கண்டிப்பாக இருக்கும். வங்காள விரிகுடா கடலில் எந்தவிதமான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைக்கும் இப்போது வாய்ப்பு இல்லை. ஆதலால், இந்த மழையை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவாகும் மழை என நினைக்க வேண்டாம்.
TamilNadu weather man post his face book page, Easterly Wave Update - Tamil Nadu coast including Chennai will get moderate rains between 21-24th December with lots of spells and no flooding type rains can be expected. So enjoy the rains.Chennai might get rains for atleast 2 days. But dont expect too much out of these spells. Enjoy the rains. Do carry the rain coat with you for next 3-4 days.