நாட்டையே உலுக்கிய 2 ஜி ஸ்பெக்டம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுகவை சேர்ந்த ஆராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி பாட்டியாலாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஓ.பி. சைனி வழங்கினார். அதில் 2 ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார். திமுகவை சேர்ந்த ராசா மற்றும் கனிமொழி விடுதலை செய்யப்பட்டதாக தீர்ப்பு வெளியான அடுத்த விநாடியே அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
2ஜி வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்குமோ என்று இன்று காலை வரை அடிவயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருந்த திமுகவினருக்கு இன்று சாதமான தீர்ப்பு வெளியாகியுள்ளதால் உற்சாக வெல்லத்தில் மிதக்கின்றனர். வரும் ஆர்கே நகர் இடைத்தேர்தலிலும் திமுகவே வெல்லும் என்றும் திமுகவினர் தெரிவித்துள்ளனர். 2 ஜி வழக்கின் தீர்ப்பை வரவேற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். சாலைகளில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி காட்சிகளை பாருங்கள்….
Des : Dmk Party celebration