அஜீத் படம் ரிலீஸான அன்று முதல் நாள் தியேட்டரில் பார்க்க பிடிக்காது என்று அருவி பாலாஜி தெரிவித்துள்ளார். அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ள அருவி படம் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. அந்த படம் சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இன்னும் அருவி பற்றி தான் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பெரிய நடிகர், நடிகைகள் கிடையாது, இயக்குனரோ புதுமுகம் அப்படி இருந்தும் அருவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தை கழுவி ஊற்ற சிலர் இருந்தாலும் பாராட்ட பலர் உள்ளனர் என்பது தான் உண்மை.
அஜீத்தை பற்றிய எல்லாமே பிடிக்கும். அவரின் படங்களை முதல் நாள் தியேட்டரில் பார்க்க பிடிக்கவே பிடிக்காது என பாலாஜி பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
அஜீத் படங்கள் ரிலீஸான முதல் நாள் தியேட்டரில் அவரின் ரசிகர்கள் எப்படி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் போடும் சத்தத்தில் ஒரு வசனமும் சரியாக கேட்காது. வசனங்கள் கேட்காது என்ற காரணத்தால் தான் தல படங்களை முதல் நாள் பார்க்க பிடிக்காதாம் பாலாஜிக்கு.
Balaji who has acted in Aruvi said in an interview that he is a very big fan of Ajith but doesn't like to watch his new movies on the first day of its release. He has explained as to why he is not fond of watching Ajith movies on the first day.