வீடியோவை வெளியிட்டதால் தினகரன் மீது கோபத்தில் இருக்கும் சசிகலாவின் குடும்பம்- வீடியோ

Oneindia Tamil 2017-12-20

Views 8.6K

ஜெயலலிதா வீடியோ வெளியான விவகாரத்தில் தினகரன் மீது ஒட்டுமொத்த சசிகலா குடும்பமுமே கடும் கொந்தளிப்பில் இருக்கிறது. இதனைத்தான் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா வெளிப்படுத்தியிருக்கிறார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காலத்தில், சசிகலா, இளவரசி ஆகியோர் மட்டுமே அந்த அறைக்குப் பக்கத்தில் தங்கியிருந்தனர். கார்டனில் இருந்து சென்ற பிறகு, ஓரிருநாள் கழித்தே கண்விழித்தார் ஜெயலலிதா. அந்தநேரத்தில் ஜெயலலிதா எப்படி இருக்கிறார் என்ற பதட்டம் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் நிலவியது. இந்தப் பதட்டத்தை அப்போலோ அறிக்கைகள் அவ்வப்போது தணித்துக் கொண்டிருந்தன.

ஜெயலலிதாவைப் பாதுகாத்து வந்த என்.எஸ்.ஜி வீரர்களும் டெல்லிக்குத் திரும்பிவிட்டனர். ஜெயலலிதாவின் நிலை குறித்து மிகவும் ரகசியமாகவே வைத்துக் கொண்டது அப்போலோ. மத்திய அரசின் பிரதிநிதிகளும் ஜெயலலிதா தொடர்பான விஷயங்கள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டனர்.
இந்த விவகாரம் தங்களுக்கு எதிராக திரும்பலாம் என்பதை உணர்ந்த சசிகலா குடும்பத்து வாரிசு ஒருவர், நாளை நம் மீதுதான் அனைத்துப் பழிகளும் வந்து சேரும். உங்களோடு அம்மா இயல்பாக பேசும் வீடியோக்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

Sources said that Sasikala Family is very disappointing over the release of Jayalalithaa's treatement video which was released by Dinakaran Camp.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS