விராட் கோஹ்லி ஆன்டி இந்தியனாம் பாஜக எம்.எல்.ஏ. சொல்கிறார்- வீடியோ

Oneindia Tamil 2017-12-20

Views 2

மத்திய பிரதேச மாநிலம் குனா தொகுதியின் பாஜக எம்எல்ஏ பன்னா லால் சக்யா, இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி தேசபக்தர் தானா என்று புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். ராமர், கிருஷ்ணன் இந்தியாவில் திருமணம் செய்த போது கோஹ்லி மட்டும் இத்தாலியில் திருமணம் செய்துள்ளாரே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குனா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னா லால் சாக்யா, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி குறித்து ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். கோஹ்லி உண்மையில் தேசபக்தர் கிடையாது, அப்படி தேச பக்தி உள்ளவராக இருந்தால் அவர் இத்தாலியை தனது திருமணத்திற்கா தேர்வு செய்திருக்க மாட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

கோஹ்லி பணம், புகழ் அனைத்தையும் இந்தியாவில் சம்பாதித்தார் ஆனால் திருமணத்திற்கு இத்தாலியை தேர்வு செய்திருக்கிறார். பகவான் ராமர் இந்த மண்ணில் தான் திருமணம் செய்து கொண்டார், அதே போல கிருஷ்ணரும் இங்கு தான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர் மட்டும் இத்தாலி சென்று திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.


Madhya pradesh BJP MLA Panna Lal sparked a new controversy that star cricketer Virat Kohli is not a patriot because he chose Italy as his marriage destination.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS