ஜெயலலிதா சிகிச்சை வீடியோ உண்மைதானா ?- வீடியோ

Oneindia Tamil 2017-12-20

Views 8

அப்பலோ மருத்துவமனையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் இருப்பது ஜெயலலிதா தானா அல்லது ரோபோவா என்ற கேள்வி எழுப்பியுள்ளார் அவருடைய தோழி கீதா.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ என்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று 20 நிமிட வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா குறித்து வெளியாகும் தகவல்களை கேட்டு மிகுந்த மனவேதனையுடனே இந்த வீடியோவை வெளியிடுவதாக வெற்றிவேல் இதற்கு காரணமும் சொன்னார்.

ஆனால் இந்த வீடியோ பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன, நீதிமன்றத்தில் வழக்கு பொதுவெளியில் கேள்வி என ஓராண்டில் எழுந்த சர்ச்சைகள் எண்ணில் அடங்காதவை. இந்நிலையில் அவர் மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

Jayalalitha's friend Geetha accuses the person in the video is not Jayalalitha, its a morphed video and with the technology and robo Sasikala team made this video.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS