குஜராத் தேர்தல் முடிவிற்கு பின் ராகுலுக்கு வந்த எஸ்எம்எஸ்...வீடியோ

Oneindia Tamil 2017-12-19

Views 1

குஜராத் தேர்தல் முடிவிற்கு பின் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அல்பேஷ் தாக்குர் முக்கியமான எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். இந்த எஸ்எம்எஸ்க்கு ராகுல் காந்தி உடனே பதில் அனுப்பி உள்ளார்.

அல்பேஷ் தாக்குர் மூலம் இந்த எஸ்எம்எஸ் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த விவரம் குஜராத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அல்பேஷ் தாக்குர் ராகுலுக்கு ''நாம் வென்று விட்டோம்'' என்று எஸ்எம்எஸ் செய்து இருக்கிறார். இதற்கு ராகுல் மிகவும் அழகாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறதுகுஜராத் தேர்தலில் ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்குர் என்ற மூன்று இளம் தலைவர்களும் முக்கிய பங்கு வகித்தார்கள். இதில் ஜிக்னேஷ் மேவானி வட்காம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று இருக்கிறார். பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவராக பார்க்கப்படும் காங்கிரஸின் அல்பேஷ் தாக்குர் ரந்தன்பூர் தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். இவர் 85,777 வாக்குகள் பெற்றார்.




Alpesh Thakor messaged chief Congress Rahul Gandhi after Gujarat election result. In his messege he says "We won". Rahul replies to this SMS "Congress won, brother,". This convo information got viral all over the party members. Congress contestant Alpesh Thakore wins in Randhanpur with 85,777 votes. BJP contestant Solanki Lavingji Muljiji Thakor got only 70,920 votes.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS