ரோஹித்துக்கு, ஒரு வாரம் கழித்து கோஹ்லி பதிலடி!- வீடியோ

Oneindia Tamil 2017-12-19

Views 1

தனது திருமணத்திற்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த ரோகித் ஷர்மாவுக்கு, அதேபோன்ற ஜாலியோடு நன்றி கூறியுள்ளார் விராட் கோஹ்லி. விராட் கோஹ்லிக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதனால் இந்திய அணிக்கு ரோகித் ஷர்மா தலைவராக செயல்படுகிறார். சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒன்டே போட்டியில் இரட்டை சதம் விளாசி சாதித்தார் ரோகித் ஷர்மா. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரோகித் ஷர்மா.

ரோகித் ஷர்மா கடந்த 12ம் தேதி டிவிட்டரில் அனுஷ்கா, கோஹ்லி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். கணவருக்கான கையேடு தன்னிடம் உள்ளதாகவும், அதை ஷேர் செய்ய தயார் என்றும் கேலியாக குறிப்பிட்டிருந்தார் ரோகித். ஏனெனில் திருமண வாழ்வில் இவர் 2 வருட சீனியர்.

இதை பார்த்த கோஹ்லி, இன்றுதான் ரிப்ளை செய்துள்ளார். அதில், ஹாஹாஹா, நன்றி ரோகித். அப்படியே, டபுள் செஞ்சுரி கையேட்டையும் எனக்கு ஷேர் செய்யவும் என கூறியுள்ளார். கோஹ்லி இதுவரை ஒருநாள் போட்டியில் டபுள் செஞ்சுரி அடித்தது இல்லை.

இந்த டிவிட்டுகள், நெட்டிசன்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக அனுஷ்கா ஷர்மாவும் ரோகித்துக்கு நன்றி தெரிவித்திருந்தார். சிறப்பான ஆட்டம் என ரோகித்தின் டபுள் செஞ்சுரியை அனுஷ்கா பாராட்டியுள்ளார்.

Indian captain Virat Kohli's sense of humour today won Internet after he gave a witty retort to colleague Rohit Sharma's congratulatory wedding message. Rohit is the only batsman to have hit 3 double centuries in ODI cricket, one of the very few records that has eluded the otherwise phenomenal Kohli so far. Earlier, Anushka too had congratulated Rohit Sharma.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS