நான் தளபதியையோ, அவரது படங்களையோ எதுவும் தவறாக பேசவில்லை என்று இயக்குனர் சினிஷ் விளக்கம் அளித்துள்ளார். பலூன் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சினிஷ் தளபதி படத்தை கிண்டல் செய்வதாக நினைத்து விஜய் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர். இந்நிலையில் இது குறித்து சினிஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
பிரஸ் மீட்...ஓகே. விளக்கம் அளிக்க வேண்டிய நேரம். பல போராட்டங்களுக்கு பிறகு சினிமா துறையில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றுள்ள ஒரு சாதாரண சினிமா ரசிகன் நான்.
சினிமா மீது உள்ள அன்பால் பேசியது தான் பிரஸ் மீட்டில். ஒரு படத்தை பார்த்து இன்ஸ்பையர் ஆகி ஹிட் கொடுக்க நிஜமா திறமை வேணும்.. ஆனால் இன்ஸ்பையர் ஆன விஷயத்தை ஒத்துக்கணும், அப்படி இல்லைனா சோஷியல் மீடியால கலாய்ச்சிடுவாங்கனு எதார்த்தமான விஷயத்தை தான் நான் சொன்னேன்.
நான் இன்ஸ்பையர் ஆகித் தான் படம் எடுத்தேன் என்பதை தெரிவிக்க விரும்பினேன். பல படங்களை இயக்குனர்கள் இன்ஸ்பையர் ஆகித் தான் எடுக்கிறார்கள். அதற்கு கிரெடிட் கொடுப்பது தான் முக்கியம். இதை தான் ஒரு சாதாரண ரசிகனா சொல்ல முயற்சி செய்தேன்.
சத்தியமா ஒரு டைரக்டரா சீன் போடலாம்னு பேசல. என் படம் ஹிட்டாகும் என்று இதுவரை நான் எங்குமே சொல்லவில்லை. ஏனென்றால் அதை ரசிகர்களே தீர்மானிக்க வேண்டும். அதனால் நான் கெத்தா பேசுறேன்னு நெனச்சு எல்லாம் பேசல. எதுவா இருந்தாலும் மனசுல இருந்து பேசிடுவேன்.என்னை தெரிந்தவர்களுக்கு இது தெரியும். இதை ஏன் தற்போது கூறுகிறேன் என்றால் நான் யாரையும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்த விரும்பவில்லை.
Balloon director Sinish has given an explanation on facebook about his speech in the press meet of his upcoming movie. He explained that he neither makes fun of Vijay nor his movies.