ஒரே பந்து வீச்சு மூலம் கிரிக்கெட் உலகையே வாய் பிளக்க வைத்த ஸ்டார்க்- வீடியோ

Oneindia Tamil 2017-12-19

Views 1

இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சு என கிரிக்கெட் உலகமே வர்ணிக்கிறது ஆஷஷ் தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் வீசிய அந்த ஒரு பந்தை. ஆஷஷ் தொடரின் 3வது டெஸ்ட், வேகபந்து வீச்சுக்கு பிரபலமான பெர்த்-டபிள்யூஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அதன் நான்காவது நாளில்தான் வியப்பூட்டும் அந்த ஒரு பந்து வீச்சு அதிசயம் நிகழ்ந்தது. இங்கிலாந்து அணியின், வலது கை பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் அவுட்டாக்கப்பட்ட விதம்தான், அந்த பந்தை, இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சு என அழைக்க காரணம்.

ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க், ரவுண்ட் தி விக்கெட் திசையிலிருந்து ஓடி வந்தார். அதாவது பேட்ஸ்மேனின் முகத்திற்கு நேராக ஓடி வந்தார். பவுலிங் கிரீசின் இடதுபக்கம் ஓரம் அருகே நின்றபடி பந்தை, பேட்ஸ்மேனின் கால் திசை, நோக்கி வீசினார். பொதுவாக கிரீசின் ஓரத்தில் நின்று வீசப்படும் பந்துகள் ஸ்விங் ஆவது கஷ்டம்.
ஸ்விங் செய்ய விரும்பும் பவுலர்கள், ஸ்டம்பை ஒட்டினாற்போல நின்றுதான் பந்து வீசுவார்கள். ஸ்டார்க் அப்படி செய்யவில்லை. அவர் பந்து வீசிய இடமும், அவர் பந்தை எறிந்த திசையையும் வைத்து பார்த்தால் அந்த பந்து 'பிட்ச்'ஆன பிறகு இன்னும் அதிகமாக லெக் திசையில்தான் சென்றிருக்க வேண்டும்.

On December 17, 2017, Mitchell Starc bowled a peach of a delivery that disturbed the timber to send a set James Vince packing on Day 4 of the third Ashes Test at the WACA.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS