ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் அனைவரையுமே தம்முடைய ஸ்லீப்பர் செல்களாக்கிவிட்டாராம் சுயேச்சை வேட்பாளர் தினகரன். இதனால் ரொம்பவே பதறிப் போயிருக்கிறது அதிமுகவும் திமுகவும் என்கின்றன கள தகவல்கள்.
ஆர்.கே.நகரைப் பொறுத்தவரையில் எத்தனை நூறு கோடி செலவானாலும் பரவாயில்லை... எம்.எல்.ஏ.வாகியே தீருவது என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு விளையாடுகிறாராம் தினகரன். அந்த கட்சி, இந்த கட்சி, தேர்தலில் போட்டியிட்டார்கள், போட்டியிடவில்லை என பாரபட்சமே இல்லையாம்.வாக்கு பர்சேஸிங்கை தமிழகம் இதுவரை பார்த்ததே இல்லையாம். அதுவும் தமிழகத்துக்கு திருமங்கலம் பார்முலாவை கற்றுக் கொடுத்த திமுகவெல்லாம் ஆர்கே நகரில் தினகரனின் வியூகத்தால் 3-வது இடம் கிடைத்தாலே ஆச்சரியம் என மென்று விழுங்குகிறதாம்.
இதனால் தினகரனை முடக்கிப் போடும் வேலைகளும் நடக்கின்றன. இதன் ஒருபகுதியாகத்தான் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடக்கும் டிசம்பர் 21-ந் தேதி டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாம். நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்பது குறித்து அவருடைய வழக்கறிஞர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
ஆனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டால் பா.ஜ.கவுக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் கட்டாயம் தேர்தலை நடத்துவார்கள். என் மீது வழக்குப் போட்டு முடக்க நினைப்பார்கள். எதைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை' என ஆதரவாளர்களை முடுக்கிவிட்டிருக்கிறாராம் தினகரன். தேர்தல் பணிகளுக்கு தினகரன் தேர்வு செய்திருப்பது முழுக்க உள்ளூர் ரவுடிகள் மட்டும்தான். இந்த ரவுடிகள் மீது காவல்நிலையத்தில் ஏராளமான புகார்கள் உள்ளன. தேர்தலுக்கு மூன்று மாதங்கள் முன்னரே இவர்களை எல்லாம் தினகரன் தரப்பினர் சரிக்கட்டிவிட்டனர். எவ்வளவு சண்டைகள் வந்தாலும் இவர்களைக் கையில் வைத்திருப்பது நல்லது என தினகரன் நினைக்கிறார்.