சனி பெயர்ச்சி..எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்?- வீடியோ

Oneindia Tamil 2017-12-19

Views 107

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிபகவான் ஒரு ராசிலியிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார் சனிபகவான். சனிபகவான் இன்று நீர் ராசியான விருச்சிகத்தில் இருந்து நெருப்பு ராசியான தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு இன்று செவ்வாய் கிழமை காலை 10.01 மணிக்கு மூலம் நட்சத்திரம் 1வது பாதத்தில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார் சனீஸ்வர பகவான் சனி பெயர்ச்சியை முன்னிட்டு இன்று 12 ராசிகளைச் சேர்ந்த பக்தர்கள் அர்ச்சனை செய்து பரிகாரம் செய்தனர்.

சனி என்றாலே எல்லோருக்குமே அச்சம்தான். ஏனென்றால் நாடு ஆண்ட மன்னர்களையும் காட்டுக்கு அனுப்பிய புண்ணியவான். அதனாலேயே சனி ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு பெயர்ந்தாலே சற்று நடுக்கம்தான். பனிரெண்டு ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகளுக்கு அமரும் சனிபகவான் தனது முழு பயணத்தை முப்பது ஆண்டுகளில் முடிக்கிறார். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வதால் மந்தன் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை என்று கூறுவதற்கேற்ப அல்லாமல் வாழ்வில் கெட்டு நிற்போரையும் தலைநிமிர வைக்கும் ஆற்றல் படைத்தவர் சனி. இவர் மிக நேர்மையானவர், தவறிழைப்பவர்களைத் தண்டிக்கக் கூடியவர், நலம் வேண்டுவோருக்கு ஏராளமாக வாரி வழங்குபவர் என்ற பெருமை உடையவர்.

விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசியில் இடம் பெயர்ந்துள்ளார் சனிபகவான். இம்முறை சனிபகவான் பார்வை கும்பம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளின் மீது விழுகிறது. திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் பரிகார பூஜைகள் செய்ய காரைக்கால் மற்றும் புதுச்சேரி, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காரைக்காலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது


Sani bagavan transits from viruchiga rasi to danusu rasi on today. Devotees crowds in Tirunallar, lakhs of devotees take bath in Nala Theertham and Dharisanam shani bagavagan.


credits:
Dreamy Flashback Kevin MacLeod (incompetech.com)
Licensed under Creative Commons: By Attribution 3.0 License
http://creativecommons.org/licenses/by/3.0/

Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: https://incompetech.com/music/royalty...

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS