ஆர் கே நகாரில் வசிக்க முடியாமல் தவிக்கும் பிரபல இயக்குனர் !!- வீடியோ

Filmibeat Tamil 2017-12-18

Views 1.2K

ஆர்.கே நகரில் வசிக்காமல் போய்விட்டேனே என்று இயக்குனர் சி.எஸ். அமுதன் ஃபீல் பண்ணியுள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆர்.கே. நகர் மக்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணம் தவிர்த்து சில பொருட்களும் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
புதிய போஸ் சவுண்ட்டச்சை வாங்க விரும்புகிறேன். ஆர்.கே. நகரில் வசிக்காமல் போய் விட்டேனே என்று இயக்குனர் சி.எஸ். அமுதன் ட்விட்டரில் ஃபீல் பண்ணியுள்ளார்.
தமிழ் படத்தின் இரண்டாம் பாகமான தமிழ் படம் 2.0-ஐ எடுத்துக் கொண்டிருக்கிறார் அமுதன். அந்த படத்தின் போஸ்டரில் சிவா சமாதியில் அமர்ந்து தியானம் செய்வது போன்று இருந்தது. போஸ்டரில் யாரை கலாய்த்துள்ளனர் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். அதை ஏன் நாங்க சொல்லிக்கிட்டு...
அடுத்தவர்களை கலாய்த்து கோலிவுட் படம் எடுக்கும்போது பாலிவுட் நிஜ ஹீரோக்களை பற்றி படம் எடுக்கிறது என்று லட்சுமி ராமகிருஷ்ணன் ட்வீட்டியிருந்தார். இதை பார்த்த அமுதன், ஹாய் லட்சுமி, பாலிவுட் சிறந்த படங்களை எடுக்கிறது ஆனால் ஸ்பூஃப் படங்களை ஏன் குறைத்து மதிப்பிட வேண்டும். சமூக கொடுமை ஒன்றும் கிடையாதே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


While RK Nagar people are happy as they are getting goodies ahead of bypoll that will be held on december 21, director CS Amudhan tweeted, 'Really want to buy the new Bose SoundTouch. How I wish I lived in RK nagar...'

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS