அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் மற்றும் பலர் நடித்த 'அருவி' திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான அருவி படத்தை விமர்சகர்களும், திரையுலகினரும் பாராட்டி வருகிறார்கள். அந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அதிதி பாலனையும் பாராட்டி வருகின்றனர்.
ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒரு நிராகரிக்கப்பட்ட பெண்ணின் வலி வெகு சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் 'அருவி' படம் பார்த்துவிட்டு படத்தையும், அதில் நடித்திருப்பவர்களையும் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
'அருவி - நல்ல படம். எல்லாவற்றையையும், எல்லோருக்கும் முகமூடியை அவிழ்க்கிறது. இயக்குநர் அருண்பிரபுவின் சிறப்பான பணி. அதிதி பாலனும் மற்றவர்களும் அருமையாக நடித்திருக்கிறார்கள்' எனப் பாராட்டியுள்ளார் ஷங்கர்
'Aruvi' starring Aditi Balan and many others in Arunparbhu Purushothaman's direction is receiving the unanimous reception of fans. In this case, director Shankar has seen the movie 'Aruvi' and has tweeted about the film and the actors.