ஐதராபாத்தில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் போலீஸ் நடத்திய ரெய்டில் மும்பையைச் சேர்ந்த இரண்டு பாலிவுட் நடிகைகள் மற்றும் ஒரு டிவி நடிகையை கைது செய்துள்ளனர். ஆனால் அந்த பாலிவுட் நடிகைகளின் பெயரோ, புகைப்படமோ இதுவரை வெளியிடப்படவில்லை. அது பற்றி விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ரிச்சா சக்சேனா என்ற நடிகை என்பது மட்டும் தெரியவந்துள்ளது.
ரிச்சா சக்சேனா 'ஜூன் 1:43' எனும் தெலுங்குப் படத்தில் நடித்திருக்கிறார். இவர் போலீசாரிடம் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கடந்த திங்கட்கிழமை மும்பையில் இருந்து ஐதராபாத் வந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நடிகைகளோடு இரண்டு புரோக்கர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 ஸ்டார் ஹோட்டலின் மேனேஜரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்த பணம், நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Bollywood actresses and a TV actress from Mumbai have been arrested by police in a five-star hotel in Hyderabad. One of the arrested persons is the actress Richa Saxena.