நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் கூட தேசியத்தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தால் காவிக் கொடி பறந்தது. ஆனால் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பாஜகவிற்கே தண்ணி காட்டி வருகிறது காங்கிரஸ். இதற்கான காரணங்கள் என்ன? 22 ஆண்டுகளாக பாஜகவின் இரும்புக் கோட்டையாக இருந்து வருகிறது குஜராத் மாநிலம். பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மன்னின் மைந்தன் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களை எப்படி பார்க்கிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை பார்த்தே குஜராத் மக்கள் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை ஏற்றுள்ளனர் என்று பாஜகவினர் பெருமையோடு கூறினர். ஆனால் பாஜகவின் நம்பிக்கைகளை தகர்த்து 32 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக முன்னிலை இடங்களை காங்கிரஸ் பெற்று வருகிறது.
பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைத்ததும் தேசிய தலைவர் அமித்ஷாவோடு கைகோர்த்து நாடுமுழுவதும் காவிக்கொடியை பறக்க விடுவது தான் அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. இதில் வெற்றியும் கண்டது பாஜக என்றே சொல்லாம். உத்திரபிரதேச சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றி கண்டு அங்கு ஆட்சி அமைத்தது பாஜக, பீஹாரில் நிதிஷ்குமார் லாலுபிரசாத் யாதவ் கூட்டணி உடைந்த போது நிதிஷ்குமாருக்கு ஆட்சியமைக்க ஆதரவளித்து அங்கும் ஆட்சியில் இடம்பெற்றது.
இதே போன்று உத்ராகண்ட், மணிப்பூர், கோவாவிலும் பாஜக இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்தது. கேரளாவிலும், தமிழகத்திலும் பாஜக நுழைய எடுத்தமுயற்சிகள் எதுவும் எடுபடவில்லை. இதனிடையே குஜராத் தேர்தலில் தலைவர்கள் பிசியாக தற்போது வெளியாகி வரும் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் அவர்களை கலங்கடிக்க வைத்துள்ளது.
Why BJP is toughing fight in its 22 years ruling state of Gujarat here is the reasons what are the positives and negativers of BJP side.