நிலக்கரி ஊழல் வழக்கில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மதுகோடா குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மதுகோடா. மதுகோடா முதல்வராக இருந்தபோது நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
அங்குள்ள ராஜ்ஹாரா என்ற இடத்தில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில், ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டுகள் வந்தன. கொல்கத்தாவைச் சேர்ந்த வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் நிறுவனம் பயனடையும் வகையில் மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்டோர் தங்கள் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
A special Central Bureau of Investigation (CBI) court on Saturday sentenced former Jharkhand Chief Minister Madhu Koda to three years imprisonment, along with a fine of Rs 25 lakh.