ஆங்கில மீடியா குரூப்பான டைம்ஸ்ஆப் இந்தியா, 2019 லோக்சபா தேர்தல் தொடர்பாக ஆன்லைன் சர்வே நடத்தியது. இதில் நாட்டு மக்கள் மனநிலை குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 12 முதல் 15ம் தேதிவரை இந்த சர்வே, அதன் வெவ்வேறு மொழிகளில் உள்ள 10 வெப்சைட்டுகளின் வாயிலாக நடத்தப்பட்டது. 72 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த சர்வேயில், சுமார் 5 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த சர்வே பல ஆச்சரியங்களை உள்ளடக்கியுள்ளது. 2019 லோக்சபா தேர்தலில் இப்போதைய மோடி அரசே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று 79 சதவீதம் மக்கள் தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, குஜராத் தேர்தல் பிரசாரத்தில் நடந்த கூத்துகள் ஆகியவற்றுக்கு நடுவேயும் மோடி அரசுக்கே அதிக மக்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.
காங்கிரஸ் வலிமையிழந்து இருப்பதே மக்களின் இந்த மனநிலைக்கு முக்கிய காரணணமாக தெரிகிறது. ஏனெனில், 73 சதவீதம் மக்கள், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் இருந்தாலும் கூட அக்கட்சிக்கு வாக்களிக்கப்போவதில்லை என கூறியுள்ளனர். கடந்த கால கசப்புகள், ராகுல் தலைமை மீதான நம்பிக்கையின்மை போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம்.
79% of those surveyed said that a Modi-led government is currently the most likely scenario in the 2019 Lok Sabha elections