மறைந்த முதல்வர் ஜெயலலிதா படுத்த படுக்கையாகத் தான் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் என்றும் அதன் பிறகு உடல்நலன் தேறிய நிலையில் தான் திடீரென உயிரிழந்தார் என்றும் அப்பலோ மருத்துவமனை துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறியுள்ளார். ஓராண்டுகளைக் கடந்தாலும் மர்மம் விலகாத நிலையில் இருக்கிறது அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மரணம். இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது என்ன நிலையில் இருந்தார்,சிகிச்சையின் போது அவருக்கு அருகில் யார் இருந்தார்கள் என்ற தகவல்களை அப்பலோ மருத்துவமனையில் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறியுள்ளார்.
டெல்லியில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளதாவது : ஜெயலலிதாவிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பான மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் அனைத்து மர்மங்களும் விலகும் என்று நினைக்கிறேன்.
Apollo hospital vice president Preetha Reddy says in an exclusive interview to News 18 Tamilnadu that in breathless state only Jayalalitha admitted in hospital but after that she recovered from it she says.