விசுவாசத்தோடு கடையை சாத்தும் அஜித் சிவா கூட்டணி !!- வீடியோ

Filmibeat Tamil 2017-12-15

Views 11.6K

விசுவாசம் படத்தை அடுத்து அஜீத் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. வீரம், வேதாளம், விவேகம், தற்போது விசுவாசம் என்று தொடர்ந்து நான்கு படங்களில் அஜீத் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். போதும் தல வேறு இயக்குனர் படத்தில் நடிங்க என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். விவேகம் படத்தை அடுத்தே வேறு இயக்குனரின் படத்தில் நடிக்குமாறு ரசிகர்கள் தெரிவித்தனர்.
விசுவாசம் படத்தை அடுத்து அஜீத் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. பில்லா வெற்றிப் பட இயக்குனருடன் சேர்ந்து அஜீத் மீண்டும் பணியாற்றினால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான்.
பில்லா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து விஷ்ணுவர்தன் ட்வீட்டியிருந்தார். திட்டம் ஒன்று வைத்திருக்கிறேன், விரைவில் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் விஷ்ணு.
மீண்டும் அஜீத்தை வைத்து படம் எடுப்பதாக விரைவில் அறிவிப்பு வெளியிடுங்க சார் என்று தல ரசிகர்கள் விஷ்ணுவர்தனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரசிகர்கள் கோரிக்கை விடுப்பது எல்லாம் சரி, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க அஜீத் ஒப்புக் கொள்ள வேண்டுமே. விசுவாசத்திற்கு பூஜை போட்ட கையோடு அடுத்த படமும் எனக்கு தான் என்று சிவா அஜீத்திடம் வாக்குறுதி வாங்காமல் இருந்திருக்க வேண்டும். இந்த கூட்டணி போதும் தல போதும்.


Buzz is that Ajith may act in Vishnu Vardhan's movie after Viswasam. The Billa director is also eager to direct Ajith. But only Ajith has to confirm whether he is going to give chance to Vishnu again.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS