ரியல் தீரன் பெரியபாண்டிக்கு இரங்கல் தெரிவித்த ரீல் தீரன் கார்த்தி

Filmibeat Tamil 2017-12-14

Views 5.3K

ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனுக்கு சல்யூட் என்று ட்வீட்டியுள்ளார் கார்த்தி. ஹெச். வினோத் இயக்கத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடந்தது போன்று நிஜத்தில் நடந்துள்ளது. சென்னையில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் மறைவுக்கு முதல்வர், உயர் அதிகாரிகள், பிரபலங்கள், பொது மக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கனத்த இதயத்துடன் உங்களுக்கும், உங்களின் குடும்பத்தாருக்கும் சல்யூட் சார் #Police #Periyapandian என கார்த்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மக்களை காக்க தனது உயிரை தியாகம் செய்த அவர் தான் உண்மையான ஹீரோ. அவரின் வீரத்திற்கு சல்யூட். ஈடுகட்ட முடியாத இழப்பு. இதற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்று நடிகர் விஷால் ட்வீட்டியுள்ளார்.
உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் பெரியபாண்டியன். நீங்கள் தான் நிஜ ஹீரோ என தெரிவித்துள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.


Actors Karthi, Vishal and Harish Kalyan took to twitter to pay their tributes to the real Theeran Periya Pandi who was shot dead by burglars in Rajasthan.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS