ஓடியனுக்காக 18 கிலோ வரை எடை குறைத்த மோகன்லால் !!

Filmibeat Tamil 2017-12-14

Views 5.8K

மோகன்லால் நடித்துவரும் 'ஒடியன்' திரைப்படத்தை விளம்பரப் படங்கள் இயக்குநர் ஶ்ரீகுமார் மேனன் இயக்குகிறார். இந்தப் படத்தை மோகன்லால் சொந்தமாகத் தயாரிக்கிறார். மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மோகன்லால் இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். 'ஒடியன்' படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், மோகன்லால் இளமையான தோற்றத்தில் நடிக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் வெளியான 'கூதரா' படத்திற்குப்பின் மிகவும் வித்தியாசமான தோற்றங்களில் மோகன்லால் நடித்து வரும் படம் தான் 'ஒடியன்'. இதில் இளமை மற்றும் வயதான தோற்றங்களில் ஒடியன் மாணிக்கன் என்கிற பிளாக் மேஜிசியனாக நடித்து வருகிறார் மோகன்லால்.
மிகப்பெரிய ஆக்ஷன் படமாக உருவாக்கி வரும் இந்தப்படத்தை விளம்பரப்பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
நேற்று முன்தினம் இந்தப் படத்தின் டீசர் வெளியான நிலையில், இந்தப்படத்தில் இடம்பெறும் மோகன்லாலின் இளம் வயது தோற்றம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்திற்காக சுமார் 18 கிலோ வரை எடை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார் மோகன்லால்.


Sreekumar Menon is directing the movie 'Odiyan' starring Mohanlal. Mohanlal is producing this film. Manju Warrier and prakashraj are playing lead roles in this movie. Mohanlal has played a different role that has not yet appeared. Teaser of 'Odiyan' was released on December 12. In this case, Mohanlal's young look photo is released.

Share This Video


Download

  
Report form