ஜெயம் ரவியின் அடுத்த பட பூஜை... ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த டைட்டில்!- வீடியோ

Filmibeat Tamil 2017-12-14

Views 3K

'டிக் டிக் டிக்' படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் படத்திற்கு 'அடங்க மறு' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கார்த்திக் தங்கவேல் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஜெயம் ரவியின் 24-வது படமான 'அடங்க மறு' படத்தில் ராஷி கண்ணா நாயகியாக நடிக்க இருக்கிறார். 'விக்ரம் வேதா' படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ் இந்தப் படத்தின் இசையமைபாளராகப் பணியாற்றுகிறார்.ஆண்டனி ரூபன் படத்தின் எடிட்டராக பணியாற்றுகிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கும் 'சங்கமித்ரா' படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி.

அடங்க மறு' படம் பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளது. இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டனர். படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதும் #AdangaMaru ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது.

'டிக் டிக் டிக்' படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் படத்திற்கு 'அடங்க மறு' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கார்த்திக் தங்கவேல் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Jayam Ravi will be lead in the movie titled 'Adanga Maru' after 'Tik Tik Tik'. Karthik Thangavel, who works as assistant director to director Saran, is the director of 'Adanga maru' film. Raashi khanna is the heroine of this film.

Share This Video

Download

Report form
RELATED VIDEOS